ஏகன் அனேகன் பதிவு

சிவாயநம,



இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒரு உடல் என்னும் வடிவமெடுத்து பிறந்திருந்தாலும் அனைத்து உடல்களிலும் இருப்பது ஆன்மா. நாம் வளரும் பொழுது நம் உடலை எவ்வாறு பாதுகாப்பது? இந்த உலகில் நாம் வாழ்வதற்குரிய கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை எவ்வாறு தேடுவது? அதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்வது போன்றவற்றை நமக்கு நம் அம்மா, அப்பா, ஆசிரியர் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு விஷயங்கள் நமக்கு சொல்லித் தருகிறது. நம் அனைவருக்கும் தெரியும் உடல் என்பது அழியக்கூடியது. ஆன்மா என்பது அழிவற்றது. நம் உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது நம் ஆன்மா வேறு ஒரு உலகத்திற்கு செல்கிறது.

றிவியல் என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டது. நம் உடல் சார்ந்த விஷயங்களை மட்டுமே அறிவியல் சொல்கிறது. முழு உடல் என்று எடுத்துக்கொண்டால் அந்த உடலுக்குள் இருக்கும் இதயம், கிட்னி, நுரையீரல் போன்றவற்றை வடிவமைத்து அறிவியலா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஒவ்வொரு உயிரின் உடலை வடிவமைத்தது இறைவன். உணவு என்று எடுத்துக் கொண்டால் எந்த உணவு சாப்பிடலாம்? எந்த உணவு சாப்பிட வேண்டாம்? என்று முடிவு செய்வது வரை நம்முடைய கையில் இருக்கிறது. ஆனால் உணவு எப்படி செரிமானம் ஆக வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியுமா? அவ்வாறு நாம் சாப்பிடும் உணவு ஒரு வேளை, ஒரே ஒரு வேளை செரிமானமாக விட்டால் எவ்வளவு கஷ்டப்படுகிறோம்? ஒருவேளை உணவு செரிமானம் ஆகாத பொழுது இவ்வளவு கஷ்டம் என்றால், ஒரு ஆன்மா மறுசுழற்சி இல்லாமல் ஒரு உலகத்தில் தான் செய்த பாவங்களினால் மாட்டிக்கொண்டால் எவ்வளவு கஷ்டப்படும் என்பது நமக்கு தெரியுமா? இந்த உலகத்தில் அனைத்தும் மறுசுழற்சி என்ற ஒரு விஷயத்தினால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மறுசுழற்சி இல்லை எனில் எவ்வளவு கஷ்டம் என்று பிளாஸ்டிக் பொருட்களை பார்க்கும்பொழுது நாம் உணர்கிறோம். உலகம் வெப்பமயமாதல் என்ற ஒரு விஷயத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதுபோல் நாம் எண்ணும் எண்ணங்கள், செய்யும் செயல்கள் அனைத்தும் நம்முடைய ஆன்மாவில் பதிவு செய்யப்பட்டு அந்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா இன்பம் மற்றும் துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். ஆன்மாவானது தான் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இவ்வுலகம் மற்றும் மறுஉலகம் என்ற இரண்டிலும் இன்ப துன்பத்தை அனுபவிக்கிறது.  இதை திருவள்ளுவர் கீழ்வரும் திருக்குறளில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.


இல்லாமை என்று ஒன்று வரக்கூடியது இவ்வுலகம் மறு உலகம் என்ற வேறுபாடு இன்றி வரும் என்பதுதான் பொருள். இந்தக் குறள் மறு உலகம் என்று ஒன்று இருக்கிறது என்றும் அங்கு ஆன்மாக்கள்,  இல்லாமையால்அதாவது தண்ணீர் இல்லாமையால், உணவு இல்லாமையால் வருந்த நேரிடும் என்று வலியுறுத்துகிறது.

இந்த உலகில் கஷ்டம் இல்லாமல் வாழவேண்டும் என்று கஷ்டப்பட்டு படிக்கிறோம், கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம், நம்முடைய படிப்புக்கு திருமணத்திற்கு குழந்தைகளுக்கு முதிய வயதிற்கு என்று சேர்த்து வைக்கிறோம். ஆனால் நம்முடைய ஆன்மாவை பாதுகாப்பதற்காக, இந்த உலகில் வாழும் பொழுது என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியுமா? அதை நமக்கு யாரும் வெளிப்படையாக சொல்லித் தருவதில்லை. இந்தப் பதிவின் நோக்கம் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவது. திருமந்திரத்தில் ஒரு பாடல் மூலம் திருமூலர் மிக எளிமையாக சொல்லியிருப்பார். 


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

 

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். மேலே சொல்லப்பட்ட பாடலிலுள்ள தர்மங்களை யாரும், எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். தினமும் ஏதேனும் ஒரு உயிருக்கு கைப்பிடி உணவு பசுவிற்கும் ஒரு கைப்பிடி உணவு இறைவனுக்கு ஒரு இலை அல்லது பூ அல்லது தண்ணீர் மற்றும் அனைவரிடமும் இன் முகமாக பேசுவது. மேலே சொல்லப்பட்ட விஷயங்களை நாம் செய்யும் பொழுது நம் ஆன்மாவிற்கு அடிப்படையான பாதுகாப்பு கிடைக்கிறது. அதாவது இந்த உலகில் அடிப்படை கல்வி இல்லை என்றால் எவ்வளவு கஷ்டப்படுவோம்? என்பது அனைவருக்கும் தெரியும் அது போல ஒரு ஆன்மா ஒரு சில அடிப்படையான விஷயங்களை செய்யவில்லை என்றால் மிகமிக கஷ்டப்பட நேரிடும். அந்த அடிப்படையான விஷயங்கள் செய்துவிட்டு மேலும் சில விஷயங்களை நாம் செய்யும் பொழுது நம்முடைய ஆன்மா பல்வேறு விதமான இன்னல்களிலிருந்து காப்பாற்றப்படுகிறது. இந்த விஷயங்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு நாம் எளிதாக செய்யலாம் என்பதை சொல்வதே இந்த பதிவின் நோக்கம்.


இங்கே கீழே சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் மறு உலகத்தில் ஆன்மா கஷ்டப்படாமல் இருக்க மட்டுமல்ல இந்த உலகத்தில் நாம் வாழும் பொழுது நம்மை பல்வேறு கஷ்டங்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை வாய்ந்ததாகவும் இந்த விஷயங்கள் அமைகின்றன. இங்கே கீழே சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் மறு உலகத்தில் ஆன்மா கஷ்டப்படாமல் இருக்க மட்டுமல்ல. இந்த உலகத்தில் நாம் வாழும் பொழுது ,நம்மை பல்வேறு கஷ்டங்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை வாய்ந்ததாகவும் இந்த விஷயங்கள் அமைகின்றன. அதுபோல் சிறு துளி பெரு வெள்ளம் என்று கேள்விப்பட்டிருப்போம். அதுபோல தனி மரம் தோப்பாகாது என்று கேள்விப்பட்டிருப்போம். இந்த இரண்டு பழமொழிகளும் நாம் இப்பொழுது பார்க்கப் போகும் ஒரு விஷயத்திற்கு பலமான அடித்தளமாக அமைகிறது.


பீடிகை போதும் விஷயத்துக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களா? இன்று நம் நாட்டில் பல்வேறு ஆலயங்கள் சிதிலமடைந்து இருக்கின்றன. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும்? என்று நாம் அனைவரும் அதைப்பார்த்து, வருத்தப்பட்டு விட்டு சென்று விடுகிறோம். இந்தப்பதிவில் எடுத்துக்காட்டாக ஒரு ஆலயத்தை நாம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். இந்த ஆலயம் திருவண்ணாமலை பக்கத்திலுள்ள, ஆரணி என்னும் ஊரின் பக்கத்தில் உள்ள வணக்கம்பாடி கிராமத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் திருப்பணி.  இந்தக் கோயில் திருப்பணி முடிய அவர்களுக்கு இன்னமும் தேவை 8 லட்ச ரூபாய் மட்டுமே. அவர்கள் கிட்டத்தட்ட 85% கோவில் திருப்பணியை முடித்துவிட்டார்கள். இந்தக் கோயில் திருப்பணிக்கு ஏகன் அனேகன் குழுவில் உள்ள 5000 அடியவர்கள் இணைந்து மாதம் 100 ரூபாய் இரண்டு மாதங்கள் கொடுத்தால் போதும். 5000 அடியவர்கள் இணைந்து 100 ரூபாய் கொடுக்கும் பொழுது ஒரு மாதத்திற்கு 5 லட்ச ரூபாய் இரண்டு மாதத்திற்கு 10 லட்ச ரூபாய். இந்தப் பத்து லட்சத்தை கொண்டு வணக்கம் பாடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் திருப்பணி முடிந்து வரும் ஆனிமாதம் மிக வெற்றிகரமாக கும்பாபிஷேகம் காண இயலும். இவ்வாறு ஒரு கோவில் பல ஆயிரக்கணக்கான அடியவர்கள் நிறைந்து கட்டப்படுவதால், தனிப்பட்ட முறையில் யாரும் நான் கட்டினேன் என்று அகங்காரம் கொள்ள இயலாது. மாற்றாக இறை அருளினால் என்னாலும் ஒரு சிறு பங்கு செலுத்த முடிந்தது என்கின்ற பணிவு நம் அனைவருக்கும் வரும். அதுமட்டுமன்றி இவ்வாறு அனைவரும் இணைந்தால் தான் அந்த கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் காணும் எனவே பங்களித்த ஒவ்வொருவருக்கும் இந்த கோவில் முழுமையாக கட்டப்பட்டு கிடைத்த ஒரு பலன் கிடைக்கிறது. ஆக ஆயிரமாயிரம் அடியவர்கள் இணையும் பொழுது நமக்குத் தேவை வெறும் 100 ரூபாய் மட்டுமே. ஆக வெறும் நூறு ரூபாயில் நம்முடைய ஆன்மாவின் நலம் பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி ஒரு கோவில் கட்டி முடிக்கப்படும் பொழுது முக்கியமாக சிவன் கோவில் கட்டி முடிக்கப்படும் பொழுது அதற்கு கும்பாபிஷேகம் காணும் பொழுது அதில் நம்முடைய பங்களிப்பு இருக்கும் என்றார் இவ்வுலகிலும் அந்த புண்ணிய விஷயம் நம்மை பல்வேறு துன்பங்கள் மற்றும் சோதனைகளிலிருந்து காப்பாற்றுகிறது. ஆக அனைவரும் இணையும் பொழுது நம்முடைய ஆன்மா நலம் காக்கப்படுகிறது, நம்முடைய கோவில் பாதுகாக்கப்படுகிறது. நம் அனைவருக்கும் மனநிறைவு கிடைக்கிறது. நாம் செய்த கர்மாக்களின் பாதிப்பு பெருமளவு குறைய வாய்ப்பிருக்கிறது. இவ்வளவு விஷயங்கள் இருக்கும்பொழுது நாம் ஏன் இணையக் கூடாது? நாம் ஏன் இணைந்து பங்களிக்க கூடாது? யார் யாரோ செய்த கின்னஸ் சாதனைகளை பற்றி பேசுகிறோம். நம்மாலும் சாதனை படைக்க முடியும் ஆனால் நாம் ஒற்றுமையுடன் இணைவோமா? அவ்வாறு இணைவது மட்டுமல்லாமல் மாதம் மாதம் 100 ரூபாய் பங்களிக்க நாம் அனைவரும் தயாராக இருக்கிறோமா? இந்தக் கேள்விக்கு பதில் ஏகன் அனேகன் குழு அவர்களிடம்தான் இருக்கிறது. 


சிவாய நம


Comments