Posts

ஏகன் அனேகன் பதிவு

சிவாயநம , இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒரு உடல் என்னும் வடிவமெடுத்து பிறந்திருந்தாலும் அனைத்து உடல்களிலும் இருப்பது ஆன்மா . நாம் வளரும் பொழுது நம் உடலை எவ்வாறு பாதுகாப்பது ? இந்த உலகில் நாம் வாழ்வதற்குரிய கல்வி , வேலைவாய்ப்பு போன்றவற்றை எவ்வாறு தேடுவது ? அதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்வது போன்றவற்றை நமக்கு நம் அம்மா , அப்பா , ஆசிரியர் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு விஷயங்கள் நமக்கு சொல்லித் தருகிறது . நம் அனைவருக்கும் தெரியும் உடல் என்பது அழியக்கூடியது . ஆன்மா என்பது அழிவற்றது . நம் உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது நம் ஆன்மா வேறு ஒரு உலகத்திற்கு செல்கிறது . அ றிவியல் என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டது . நம் உடல் சார்ந்த விஷயங்களை மட்டுமே அறிவியல் சொல்கிறது . முழு உடல் என்று எடுத்துக்கொண்டால் அந்த உடலுக்குள் இருக்கும் இதயம் , கிட்னி , நுரையீரல் போன்றவற்றை வடிவமைத்து அறிவியலா ? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை . ஒவ்வொரு உயிரின் உடலை வடிவமைத்தது இறைவன் . உணவு என்று எடுத்துக் கொண்டால் எந்த உ